கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கlளோ புது பெலன் அடைந்து கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். ஏசாயா 40:31 உங்கள் காத்திருப்பு விருதவாய் போகாதபடி கர்த்தர் உங்களை சந்திப்பார். 1. அவருடைய இரட்சிப்பிற்கு காத்திருக்க வேண்டும். ஆம் , பிரியமானவர்களே! நான்தான் இரட்சிக்கபட்டுவிட்டேனே , இன்னும் எதற்கு காத்திருக்கவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம் . ஒரு சத்தியத்தை அறிந்துகொள்ளவேண்டும். இரட்சிப்பு மூன்று நிலைகளை கொண்டது. அதாவது, கடந்தகால இரட்சிப்பு , நிகழ்கால இரசிப்பு , கடைசி கால இரசிப்பு ஆகும். கடந்த கால இரட்சிப்பு என்பது இயேசுவை ஏற்றுக்கொண்டவுடனே, ஞானஸ்நானம் பெற்ற உடனே நாம் பெரும் இரட்சிப்பு ஆகும். இது பொதுவான இரட்சிப்பு என்றும் சொல்லலாம். காண்க எபேசியர் 2: 5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மை கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார் ; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் , மற்றும் 2:8 கிருபையினால் விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள் இது உங்கள...