SOUND OF CAUTION.

இன்றைய வசனம்.

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்திற்கும்  விரோதமாய், தேவ கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ரோமர் 1: 18.

சத்தியமாகிய தேவவார்த்தை அடக்கி வைக்கப்படலாகாது.  மாறாக அது அறிவிக்கப்படவேண்டியது.  

இன்றைய காலங்களில் சுய பிரயோஜனத்திற்காக இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகிய தேவவார்த்தை மறைக்கப்பட்டு சுயங்கள் பிரசங்கிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆசீர்வாத வார்த்தைகளை மட்டும் வழங்கிவிட்டு உபதேச வார்த்தைகளை அடக்கி வைத்துக்கொள்ளுகின்றனர்.  இல்லையென்றால் மக்கள் சபைக்கு  வரமாட்டார்கள் என்கிற பயம்.  மக்கள் பரலோகத்தை  சுதந்தரிக்க முடியாமல் சபைக்கு வந்து என்ன  பயன். 

தன்னுடைய சுய பிரயோஜனத்திற்க்காக சபை நடத்தி சத்தியத்தை அநியாயமாய் அடக்கி வைக்கும் எல்லோர் மேலும் தேவ கோபம் நிச்சயமாய் வரும்.

வேத உபதேசம் இல்லாத சபை  எண்ணெய் இல்லாத ஐந்து கன்னிகைகளுக்கு ஒப்பாகும். நான்  உங்களை அறியேன் என்று கர்த்தர் சொல்லிவிடுவார். எச்சரிக்கையின் சப்தம் இது. ஆமென்.

கர்த்தர் தாமே உங்கள் தேவைகளை சந்தித்து உங்களை ஆசிர்வதித்து நடத்துவாராக !

Comments

Popular posts from this blog