WAITING FOR THE LORD

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கlளோ  புது பெலன் அடைந்து கழுகுகளைப்போலச் செட்டைகளை   அடித்து  எழும்புவார்கள். ஏசாயா 40:31

உங்கள்  காத்திருப்பு  விருதவாய்  போகாதபடி கர்த்தர்  உங்களை சந்திப்பார்.

1. அவருடைய  இரட்சிப்பிற்கு காத்திருக்க வேண்டும்.

ஆம் , பிரியமானவர்களே! நான்தான் இரட்சிக்கபட்டுவிட்டேனே ,  இன்னும் எதற்கு காத்திருக்கவேண்டும் என்று  நீங்கள் கேட்கலாம் .

ஒரு சத்தியத்தை அறிந்துகொள்ளவேண்டும்.
இரட்சிப்பு மூன்று நிலைகளை கொண்டது. அதாவது,

கடந்தகால இரட்சிப்பு ,  நிகழ்கால இரசிப்பு , கடைசி கால இரசிப்பு  ஆகும்.

கடந்த கால இரட்சிப்பு என்பது இயேசுவை ஏற்றுக்கொண்டவுடனே, ஞானஸ்நானம் பெற்ற உடனே  நாம் பெரும் இரட்சிப்பு ஆகும். இது பொதுவான இரட்சிப்பு என்றும் சொல்லலாம். காண்க எபேசியர் 2: 5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மை கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார் ; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள், மற்றும் 2:8 கிருபையினால் விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள் இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவுஇலவச இரட்சிப்பு  ஆகும் . இந்த நிலை இல்லாமல் இரண்டாம் நிலை இல்லை

இரண்டாவது நிலை
நிகழ்கால இரட்சிப்பு , இது மிகமிக  அவசியம் ஆகும் .
1 கொரிந்தியர் 1:18 சிலுவையை பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப்  பைத்தியமாயிருக்கிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.  இரட்சிக்கப்படுகிற நமக்கோ சிலுவையை பற்றிய உபதேசம் தேவபெலனாயிருக்கிறது என்கிறார் . இரட்சிக்கப்படுகிற நமக்கு என்று தன்னையும் பவுல் அடிகளார் சேர்த்துக்கொள்ளுகிறார் . இரட்சிக்கப்படுகிற என்ற வார்த்தை  நிகழ்காலத்தை குறிக்கிறது. எனவே அனுதினமும் நாம் பாவத்தை களைந்து பூரண இரட்சிப்பிற்குள் கடந்து  செல்லவேண்டியது அவசியமாயிருக்கிறது. அனுதினமும் பாவத்திற்கு மரிக்கும் அனுபவத்தை பெறவேண்டும்.

கடைசி கால இரட்சிப்பு என்பது , நம்முடைய இரட்சகரும் மீட்பருமான இயேசு கிறிஸ்து நம்மை மறுரூபமாக்கி  எடுத்துக்கொள்ள வரும்போது நடக்கும் இரட்சிப்பு ஆகும். காண்க 1 பேதுரு 1:5 கடைசி காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு  எதுவாக விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே  காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்த சுதந்திரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்று பரிசுத்த பேதுரு குறிப்பிடுகிறார். 

வெளி 22:20 இவைகளை சாட்சியாய்  அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான்  சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார் 

ஆகவே, இந்த கடைசி கால இரட்சிப்பிற்கு ஏதுவான செயல்களை நிகழ் காலத்திலே  பயத்துடனே நடப்பித்து  நிகழ்கால இரட்சிப்பைப்  பூரணப்படுத்தி  கடைசி கால இரட்சிப்பிற்கு நடுக்கத்துடன் காத்திருப்போம். 
கர்த்தர் தாமே உங்களை, உங்கள் ஆவி ஆத்துமா சரீரத்தில் குற்றமில்லாதபடி உங்களை காத்து நடத்துவராக !  ஆமென். (1 தெச 5:23)

Comments

Popular posts from this blog